சீனத்திரைப்பட பருவம் என்னும் கண்காட்சி ஹங்கேரியில் துவக்கம்
2024-04-29 19:55:58

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஹங்கேரியில் அரசுமுறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீனத்திரைப்பட பருவம் என்னும் கண்காட்சி ஏப்ரல் 29ஆம் நாள் ஹங்கேரியின் தலைநகரான புத்தபெஸ்ட்டில் துவங்கியது. சீன ஊடக குழுமமும் ஹங்கேரியின் ATVயும் கூட்டாக நடத்தும் இந்நிகழ்ச்சியில் சி.எம்.ஜி ஊடகம் தயாரித்த 10க்கு மேலான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஹங்கேரியின் ஊடகங்களில் ஒளிப்பரப்பப்பட உள்ளன. இப்படைப்புகள், புதிய காலத்திலான சீனாவின் உயிராற்றலை எடுத்துக்காட்டவுள்ளன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும் சீன ஊடக குழுமத்தின் இயக்குனருமான ஷென்ஹெய்சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்திய போது, இருநாட்டுத் தலைவர்களின் வழிக்காட்டுதலின் படி, சீன-ஹங்கேரி உறவு உயர் நிலையில் வளர்ச்சியடைந்து வருகிறது. சர்வதேச விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்பு மேற்கொண்டு, புதிய சர்வதேச உறவுக்கு சீரான முன்மாதிரியை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.