3ஆவது உலகச் செய்தி ஊடகங்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கு
2024-04-30 09:58:51

ஏப்ரல் 29ஆம் நாள் சீன ஊடகக் குழுமம் நடத்திய 3ஆவது உலகச் செய்தி ஊடகங்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கு பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஏ.ஐ. துறையில் கூட்டுப் பொறுப்பு என்பது இக்கருத்தரங்கின் தலைப்பாகும். சர்வதேச அமைப்புகள், சீனா மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள், சிந்தனைக் கிடங்குகள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேலான பிரதிநிதிகள் இணையவழி மற்றும் நேரடி வழிமுறையின் மூலம் இதில் கலந்து கொண்டனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்சியொங் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில், புதிய தர உற்பத்தித் திறனின் வளர்ச்சி பற்றிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரையின் வழிகாட்டலுடன், புதிய தர உற்பத்தித் திறன் மற்றும் புதிய தர பரவல் ஆற்றலின் மூலம், பண்பாடு, கலைப்படைப்பு, பண்பாட்டின் பரவல் ஆகிய துறைகளுக்கான புதிய எதிர்காலத்தைச் சீன ஊடகக் குழுமம் திறந்து வைத்துள்ளது என்றார்.

கருத்தரங்கில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஏ.ஐ. நுட்பத்தின் வளர்ச்சி குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.