இவ்வாண்டு சீனாவில் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024-04-30 10:42:28

சீனத் தேசிய அஞ்சல் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஏப்ரல் 29ஆம் நாள் வரை, சீனாவில் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 32 நாட்களுக்கு  முன்னதாகவே இந்த எண்ணிக்கை எட்டப்பட்டது.

தற்போது, கிராமப் பகுதிகளில் நாள்தோறும் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் மேலாக உள்ளது. இவ்வாண்டு, சீனாவின் மத்திய மற்றும் மேற்கு பிரதேசத்தில் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை உயர்வேகத்தில் அதிகரித்து, தொழிற்துறை வளர்ச்சிக்கான முக்கிய இயக்காற்றலாக மாறியுள்ளது. மேலும், இவ்வாண்டு, விரைவஞ்சல் நிறுவனங்கள், மின்னணு வணிக அலுவல் மேடைகளுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, சின்ஜியாங்கில் சேவை மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதால் சின்ஜியாங்கில் இருந்து அல்லது சின்ஜியாங்கு நாள்தோறும் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.