உலகச் செய்தி ஊடகங்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கில் பங்கேற்ற லீஷூலேய்
2024-04-30 10:17:47

3ஆவது உலக செய்தி ஊடகங்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கு ஏப்ரல் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லீஷூலேய் இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.

முதலாவது உலகச் செய்தி ஊடகங்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கிற்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய வாழ்த்து கடிதத்தின் வழிகாட்டலில், உலகச் செய்தி ஊடகங்களுக்கிடையேயான பரிமாற்றத்துக்குரிய முக்கிய மேடையாக இக்கருத்தரங்கு மாறியுள்ளது என்று இக்கருத்தரங்கில் பங்கேற்ற விருந்தினர்கள் தெரிவித்தனர்.  புதிய சுற்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் துறைகளின் சீர்த்திருத்தத்தில் ஏ.ஐ. நுட்பம் முக்கியப் பங்காற்றும் எனக் குறிப்பிட்டதோடு,  மக்களின் உற்பத்தி, வாழ்வு மற்றும் படிப்பின் வழிமுறைகளை அது ஆழமாக மாற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையில், வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை ஒன்றிணைத்து முன்னேற்றினால் தான், நிலையான சீரான வளர்ச்சியடைய முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.