சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வு நடைபெறவுள்ளது
2024-04-30 15:55:17

சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வு ஜூலை திங்களில் நடத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு 30ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

அப்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு, மத்திய கமிட்டியிடம் பணியறிக்கையை வழங்கவுள்ளது. தவிரவும், சீர்திருத்தத்தை முழுமையாக ஆழமாக்குதல், சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கம் முதலியவை இதன் முக்கிய நிகழ்ச்சி நிரல்களாகும். தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பணி குறித்து ஆராயப்பட உள்ளது. யாங்சி ஆற்றின் கழிமுகப் பிரதேசத்தின் ஒருமைபாட்டிற்கான உயர் தரமான வளர்ச்சியை தொடர்ச்சியாகவும் ஆழமாகவும் விரைவுபடுத்துவது பற்றிய சில கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான கருத்துகளும் இதில் பரிசீலனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இந்த அமர்வுக்குத் தலைமை தாங்க உள்ளார்.