இரு நாட்டுத் தீர்வை விரைவில் செயல்படுத்த வேண்டும் – மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள்
2024-04-30 10:55:38

உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 28 மற்றும் 29ஆம் நாட்களில் சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் காசா பகுதியில் போர்நிறுத்தத்தை விரைவில் நனவாக்கி இரு நாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இஸ்ரேல் ரஃபாவைத் தாக்கினால், அது ‘’பேரழிவாக’’ இருக்கும் என்று ஜோர்டான் தலைமையமைச்சர் அவ்ன் ஷாவ்கத் அல்-கசவுனே, எகிப்து தலைமையமைச்சர் முஸ்தபா மத்பூலி ஆகியோர் இக்கூட்டத்தில் தெரிவித்தனர். அதோடு, பாலஸ்தீனத்துக்கான சுதந்திர நாட்டை உருவாக்குவது பற்றிய "இரு நாட்டுத் தீர்வை" அவர்கள் ஆதரித்தனர்.

மோதல்களை நிறுத்தி, பிராந்திய அமைதியை உருவாக்கும் வகையில், "இரு நாட்டு தீர்வைச்" செயல்படுத்துமாறு சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்தும் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.