வுசிச்: எங்கள் சந்திப்பு பற்றிய ஒரு புத்தகம் எழுத கருத்தில் கொண்டேன்
2024-04-30 18:13:43

அலெக்சாண்டர் வுசிக், செர்பிய குடியரசுத் தலைவர் ஆவார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் அவர் பலமுறை சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

2016ஆம் ஆண்டு, ‘செர்பியாவின் பெருமை’ எனப்படும் நூறு ஆண்டுகால வரலாறுடைய ஸ்மெடேரேவோ எஃகு ஆலை, திவாலாகும் நிலையை எதிர்கொண்டது. இந்த முக்கிய தருணத்தில், சீன நிறுவனம் உதவி வழங்கியது. இதனால், இந்த எஃகு தொழிற்சாலை காப்பாற்றப்பட்ட அதேவேளை, 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பினர்.

வுசிச் அவர்களின் பார்வையில், சீனா உதவி அளிப்பது ஒரேயொரு முறை மட்டும் அல்ல. 2020ஆம் ஆண்டில், கோவிட் தொற்றுநோய் பாதிப்பைச் சமாளிக்கும் விதம் செர்பியா சீனாவிடம் இருந்து உதவி பெற்றது. அதைத் தொடர்ந்து மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் அடுத்தடுத்து செர்பியாவுக்கு கொண்டிச்செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைப் பார்த்தால், ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு கொண்ட சீனா தனது பொறுப்பை வெளிக்காட்டியதை உணர்ந்திருந்தேன் என்று வுசிச் கூறினார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பற்றி கூறுகையில், எங்கள் சந்திப்புகள் தொடர்பாக ஒரு புத்தகம் எழுவதைக் கருத்தில் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.