முதலாவது காலாண்டில் சீனாவில் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 141.9 கோடி
2024-04-30 14:49:53

சீனத் தேசிய பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஏப்ரல் 30ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில், சீனாவில் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 141.9 கோடியை எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 20.3 கோடி, அதாவது 16.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில், பயணம் மேற்கொண்ட நகரவாசிகளின் எண்ணிக்கை 107.7 கோடியாகவும், கிராமவாசிகளின் எண்ணிக்கை 34.2 கோடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 14.1 மற்றும் 25.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மேலும், உள்நாட்டில் பயணம் மேற்கொண்டோரின் மொத்த செலவு 1 லட்சத்து 52 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 22 ஆயிரம் கோடி யுவான் அதாவது 17 விழுக்காடு அதிகரித்துள்ளது.