சீனாவின் கொள்வனவு மேலாளர் குறியீட்டின் வளர்ச்சிப் போக்கு
2024-04-30 14:11:31

சீனாவின் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனம், தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தின் சேவை துறை ஆய்வு மையம் ஆகியவை, ஏப்ரல் 30ம் நாள் சீனாவின் கொள்வனவு மேலாளர் குறியீட்டை வெளியிட்டது. அதன்படி, சீனத் தயாரிப்புத் தொழிலின் கொள்வனவு மேலாளர் குறியீடு 50.4 விழுக்காடாகும். கடந்த 2 மாதங்களாக அது வளர்ச்சிப் வரம்பில் உள்ளது. தொழில் நிறுவனங்களின் உற்பத்தி வேகமாக உயர்ந்து வருகிறது. தயாரிப்புத் தொழிலின் மீட்சி மற்றும் வளர்ச்சி தொடர்ந்து அடைந்து வருவதோடு, பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி போக்கும் நிலையாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.