30 மீட்டர் உயரமுடைய மலர் அருவி
2024-04-30 10:24:18

சீனாவின் நான்நிங் நகரைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில், முக்கோணப் பிளம் மலர்கள் சுமார் 30 மீட்டர் உயரமுடைய சுவரில் பரவி, செழிப்பாக மலர்ந்தன. அருவியைப் போன்று காணப்படும் இந்த மலர்கள் கம்பீரமான காட்சியை அளித்தன. இந்த முக்கோணப் பிளம் மரத்தின் வயது 31. இந்த மரத்தில் ஆண்டுதோறும் சுமார் 20 நாட்கள் மலர்கள் பூத்துக் குலுங்கும்.