சென்சோ-17 வெற்றிகரமாக தரை இறங்கியது
2024-04-30 20:34:52

சீனாவின் சென்சோ-17 மனித ஏற்றிச்செல்லும் விண்கலத்தின் திரும்பும் கலம் வெற்றிகரமாக ஏப்ரல் 30ஆம் நாள் மாலை 17:46 மணிக்கு தரை இறங்கியது. விண்வெளிவீரர்களின் உடல்நலம் சீராகவுள்ளது.

சென்சோ-17 விண்கலம் கடந்த அக்டோபர் 26ஆம் நாள் ஏவப்பட்டது. மூன்று விண்வெளிவீரர்கள் விண்வெளியில் 187 நாட்கள் தங்கி திட்டமிட்ட பணிகளை மேற்கொண்டனர். இக்காலத்தில் அவர்கள் இரண்டு முறை விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்டு, பல்வகை பணிக்கடமைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொண்டது சுட்டிக்காட்டத்தக்கது.