முதல் காலாண்டில் சீன நெடுஞ்சாலை மூலம் ஏற்றிச்செல்லப்பட்ட சரக்குகளின் அளவு அதிகரிப்பு
2024-04-30 14:46:27

சீனப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட புதிய தரவின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீன நாடளவில் நெடுஞ்சாலை மூலம் 900கோடியே 68லட்சத்து 70ஆயிரம் டன் எடையுள்ள சரக்குகள் அனுப்பப்பட்டன. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது 5.1 விழுக்காடு அதிகமாகும். துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் எடை 408கோடி 94லட்சத்து 90ஆயிரம் டன்னை எட்டி 6.1விழுக்காடு அதிகரித்தது.

பயணியர் போக்குவரத்துத் துறையில் முதல் காலாண்டில், நெடுஞ்சாலை மூலம்  மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை 1547கோடியே 45லட்சத்து 10ஆயிரத்தை எட்டியது. கடந்த ஆண்டில் இருந்ததை விட, இது 9.0விழுக்காடு அதிகமாகும். அவற்றில் போக்குவரத்து சேவையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 283கோடியே 4லட்சத்து 40ஆயிரத்தைத் தாண்டி 17.2விழுக்காடு அதிகரித்தது. நீர்வழிப் பயணியர்களின் எண்ணிக்கை 5கோடியே 63லட்சத்து 30ஆயிரத்தை எட்டி 10.1விழுக்காடு அதிகமாகும்.