அமெரிக்காவுடன் ஆறு தரப்புகள் கூட்டம்
2024-04-30 10:21:47

சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபைசல் 29ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் ரியாத்தில், அமெரிக்காவுடன் ஆறு தரப்பு கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பாலஸ்தீன விடுதலை அமைப்புச் செயற்குழுவின் தலைமைச் செயலாளர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் முதலியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலின் புதிய செயல்பாடுகள் இதில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன. உடனடியாக போரை நிறுத்தி, மோதலுக்கு முற்றுப்புளி வைக்க வேண்டும் என்பது அவசரத் தேவையாகும். அதோடு, சர்வதேச மனித நேயச் சட்டத்தின்படி, அப்பாவி மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்டோர் வலியுறுத்தினர். மேலும், காசா பகுதியில் எல்லாத் தடைகளையும் நீக்கி, மனித நேய உதவி, காசா பகுதியில் நுழைவதை உத்தரவாதம் செய்து, மனித நேய நெருக்கடியைத் தணிக்க வேண்டும் என்றும்  இக்கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது.