சீன-பிரெஞ்சு சமையல்கார ராஜாக்கள் இடையே போட்டி எனும் காணொளி நிகழ்ச்சி
2024-04-30 19:55:56


சீன ஊடகக் குழுமமும் பிரான்ஸில் உள்ள சீனத் தூதரகமும் ஏற்பாடு செய்த சீன-பிரெஞ்சு சமையல்கார ராஜாக்கள் இடையே போட்டி எனும் காணொளி நிகழ்ச்சி, 30ஆம் நாள் ஒளிபரப்ப்ப்பட்டது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்சில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, உணவின் பெயரில் பண்பாட்டை பாலமாக்க் கொண்டு தயாரிக்கப்பட்ட இரு நாட்டு உணவு சார் பண்பாட்டு பரிமாற்றத்துக்கான நிகழ்ச்சியாக இது கருதப்படுகிறது.

அன்றைய அறிமுக நிகழ்ச்சியில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்சியொங் உரைநிகழ்த்தியபோது, சமீப ஆண்டுகளில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் வழிக்காட்டலுடன், இரு நாடுகளுக்கிடையே மக்கள் தொடர்பு பரிமாற்றம் தொடர்ந்து விரிவாகி வருகின்றது. இது உலகளவில் பல்வேறு நாகரிங்களுக்கிடையே பரஸ்பர பரிமாற்றத்துக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது என்று தெரிவித்தார்.

சீன-பிரெஞ்சு சமையல்கார ராஜாக்கள் இடையே போட்டி எனும் காணொளி நிகழ்ச்சி மொத்தம் 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் 60 நிமிடங்கள் ஆகும்.