2024ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி 4.5 விழுக்காடு
2024-04-30 14:39:24

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார முன்னாய்வு பற்றிய 2024ஆம் ஆண்டின் ஏப்ரல் அறிக்கையை சர்வதேச நாணய நிதியம், சிங்கப்பூரில் ஏப்ரல் 30ஆம் நாள் வெளியிட்டது. 2024ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடு. இது முந்தைய எதிர்பார்ப்பை விட அதிகம் என்று அந்த அறிக்கை கணித்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியம் உலகப் பொருளாதாரத்தில் மிகவும் ஆற்றல் கொண்ட பிராந்தியமாக உள்ளது, அதன் பொருளாதார வளர்ச்சி உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் 60 விழுக்காடு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.