பிரிக்ஸ் நாடுகளிடையேயான சீனாவின் வர்த்தகம் 11.3 % உயர்வு
2024-05-01 20:05:43

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையேயான சீனாவின் வர்த்தகம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 1.49 லட்சம் கோடி யுவானை எட்டியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.3 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று சீன சுங்கத்துறை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

தவிரவும், இது சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 14.7 விழுக்காடு வகித்தது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில், பிரேசிலுக்கான ஏற்றுமதி 25.7 விழுக்காடும், பிரேசிலிலிருந்து இறக்குமதி 30.1 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

அதேசமயம், சீனா-ரஷியா இடையேயான வர்த்தகம் தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும, சீனா-இந்தியா இடையேயான வர்த்தகம் முதல் காலாண்டில் 8.5 விழுக்காடு வளர்ச்சி கண்டு, தொடர்ந்து 5 காலாண்டுகளாக வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.