இவ்வாண்டில் தெற்காசியாவில் பருவமழை கால மழை அளவு உயர வாய்ப்பு உண்டு
2024-05-01 20:04:23

இவ்வாண்டின் ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழைக் காலக்கட்டத்தில், தெற்காசியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிவு இயல்பான நிலையை விட அதிகமாக இருக்கும் என்று தெற்காசிய காலநிலைக்கான முன்னாய்வு கருத்தரங்கில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மதிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரணமாக, இக்காலத்தில் பெய்யும் மழை அளவானது, இந்தப் பகுதிகளின் வருடாந்த மழைப்பொழிவில் 75முதல் 90விழுக்காடு வரை வகிக்கும். இதனால், இந்தப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரத்துக்கு ஆழ்ந்த தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்தது.

தென்மேற்கு பருவமழை, தெற்காசிய நாடுகளின் பொருளாதார மற்றும் வேளாண் உற்பத்திக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேவேளையில், பருவமழைகாலத்தின்போது ஏற்படும் கனமழை மற்றும் வெள்ளபெருக்கு பேரழிவு காரணமாக, அதிகமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனால், பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை மிகவும் முக்கியமானது என்று இவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தெற்காசிய காலநிலைக்கான முன்னாய்வுக் கருத்தரங்கு 2010ஆம் ஆண்டில் உலக வானிலை அமைப்பின் ஆதரவுடன் நடைபெற்று வருகின்றது. பருவ காலநிலைக்கான முன்னாய்வு, அது தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் தகவல் பகிர்வு ஆகியவற்றை முன்னேற்றுவதே அதன் நோக்கமாகும்.