சந்திர ஆய்வுக்கான சான்'எ-6 விண்கலம் ஏவப்பட உள்ளது
2024-05-01 20:25:23

சந்திர ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்தும் சங் ஏ-6 விண்கலத்தை மே 3ஆம் நாள் செலுத்த திட்டமிட்டுள்ளதாக சீனத் தேசிய விண்வெளி பயணப் பணியகம் மே முதல் நாள் தெரிவித்தது.

தற்போது, வான்சாங் ராக்கெட் ஏவுதல் தளத்தில், பல்வேறு ஆயத்தப் பணிகளும் நிலையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டப்பணிக்கான ராக்கெட் லாங் மார்ச்-5 உந்து விசை பொருள் சேர்க்கும் பணி தொடங்க உள்ளது. ராக்கெட் மூலம் சங் ஏ-6 விண்கலம் குறிப்பிட்ட சுற்று வட்டப் பாதையை அடைந்த பின் சந்திரனின் இருண்ட பக்கத்தில் மாதிரி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டது.