சீன அரசுத் தலைவர் பிரஞ்சு பயணத்தின் போது மூன்று தரப்புச் சந்திப்பு
2024-05-01 19:38:56

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும்போது, அந்நாட்டு அரசுத் தலைவர் மாக்ரோன், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லேயன் ஆகியோருடன் முத்தரப்பு சந்திப்பு நடத்த உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன்ஜியன் தெரிவித்தார்.

ஏப்ரல் 30ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஷிச்சின்பிங்கின் பிரான்ஸ் பயணம் பற்றி அவர் அறிமுகப்படுத்தினார்.

அவர் கூறுகையில், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து, நடைபெற உள்ள சந்திப்பை வாய்ப்பாக கொண்டு, சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே உறவின் நெடுநோக்குத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் பரஸ்பர பலன் தரும் நிலைமையை மேலும் உயர்த்த சீனா விரும்புகின்றது என்றும் தெரிவித்தார்.