பாரிஸில், சீன-பிரான்ஸ் உயர்நிலை மானிட தொடர்பு கருத்தரங்கு நடைபெற்றது
2024-05-01 19:51:42

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் அரசுமுறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன-பிரான்ஸ் உயர்நிலை மானிட தொடர்பு கருத்தரங்கு ஏப்ரல் 30ஆம் நாள் பாரிஸில் நடைபெற்றது. இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும் சீன ஊடக குழுமத்தின் இயக்குனருமான ஷென்ஹெய்சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார். இருநாடுகளின் அரசு அதிகாரிகள், நட்பு சங்கங்களின் பொறுப்பாளர்கள், ஆய்வு நிறுவனங்களின் பிரதிநிதிகள், செய்தி ஊடக துறையினர்கள் ஆகியோர் இருநாட்டுறவின் வளர்ச்சி, மானிட தொடர்பு மேம்பாடு, ஊடக ஒத்துழைப்பு முன்னேற்றம் உள்ளிட்ட மைய விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருநாட்டுத் தலைவர்களின் வழிக்காட்டுதலின் படி, இருநாடுகளிடையே மானிட தொடர்பு தொடர்ந்து ஆழமாகி வருகிறது. புதிய வரலாற்று துவக்கத்தில், பிரான்ஸ் நண்பர்களுடன் இணைந்து மேலும் அருமையான எதிர்காலத்தை உருவாக்க சீன ஊடகக் குழுமம் விரும்புகிறது என்று ஷென்ஹெய்சியோங் தெரிவித்தார்.

அரசியல் மற்றும் பொருளாதார கருத்தரங்கு, மானிட தொடர்பு கருத்தரங்கு, இளைஞர் தொடர்பு கருத்தரங்கு, சீன-பிரான்ஸ் செய்தி ஊடக பேச்சுவார்த்தை ஆகியவை, இக்கருத்தரங்கு நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.