நுகர்வு சந்தை நிதானமாக அதிகரித்தது
2024-05-02 19:50:09

சீனத் தேசிய புள்ளிவிவர ஆணையம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின் படி இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் சந்தை விற்பனை நிதானமாக அதிகரித்தது. குறிப்பாக சேவை நுகர்வு ஒப்பீட்டளவில் வேகமாக அதிகரித்து வருகிறது.

சந்தையின் அளவு தொடர்ந்து விரிவாகி வருகிறது. மாவட்டம் மற்றும் கிராம சந்தைகளின் விகிதம் நிதானமாக அதிகரித்தது. இவ்வாண்டின் முதல் காலாண்டில் சமூக நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, 12 இலட்சத்து 3270 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 4.7 விழுக்காடு அதிகம்.