கொலம்பிய-இஸ்ரேல் தூதாண்மை உறவுத் தூண்டிப்பு
2024-05-02 19:44:07

கொலம்பியா, மே 2ஆம் நாள் முதல் இஸ்ரேலுடன் அனைத்து தூதாண்மை உறவையும் தூண்டிப்பதாக அந்நாட்டு அரசுத்தலைவர் கஸ்டவோ பெட்ரோ மே முதல் நாள் அறிவித்தார்.

தலைநகர் பொகொடாவில்  நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் பேசுகையில், இஸ்ரேலின் தலைவர் இன ஒழிப்பை செயல்படுத்தியதால் அந்நாட்டுடன் தூதாண்மையைத் தூண்டிக்க தீர்மானித்தோம் என்று தெரிவித்தார். இன ஒழிப்பு, குறிப்பாக ஒரு முழு தேசிய இனத்தை ஒழிக்கும் காலத்துக்குத் திரும்ப முடியாது என்றும் பெட்ரோ வலியுறுத்தினார்.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காஸ் அன்று சமூக ஊடகத்தில் கட்டுரை வெளியிட்ட போது, பெட்ரோவின் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேல்-கொலம்பிய உறவு மாற்றாது என்றும் அவர் தெரிவித்தார்.