சீனாவில் விரைவான வளர்ச்சி அடைந்துள்ள புதிய ரக நுகர்வு
2024-05-03 17:27:38

சர்வதேச தொழிலாளர்கள் தினம், சீனாவின் மே 4 இளைஞர்கள் தினம் ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டின் மே திங்களின் துவக்கத்திலும் சீனாவில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இது, ஓராண்டில் சீனாவின் நுகர்வு சந்தையின் மிகவும் சுறுசுறுப்பான காலங்களில் ஒன்று என கருதப்படுகின்றது. சுற்றுலா, பசுமை, அனுபவம், புத்திசாலி ஆகிய துறைகளின் புதிய நுகர்வு முறைகள், பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முக்கியப் பகுதிகளாக மாறியுள்ளன.

புத்தாக்கம் மூலம் உத்வேகம் அளித்தல், தரமிக்க வினியோகம் மூலம் புதிய நுகர்வு தேவைகளை உருவாக்குதல் என தற்போது சீனாவில் ஊக்கமளிக்கப்படுகின்றது.

தற்போது, சீனாவில் புதிய ரக நுகர்வு சந்தை வளர்ச்சி சுறுசுறுப்படைந்துள்ளது. புதிய எரியாற்றல் வாகனத்தைப் பொறுத்த வரை, மின்கலம், நுண்ணறிவு ஓட்டுதல், தனி நபரின் சிறப்புகளுக்கு ஏற்ப கட்டுபாடுகள் முதலிய தொழில் நுட்பங்களில் சீனா உலகளவில் வழிக்காட்டல் தன்மை வாய்ந்த முன்னணியில் உள்ளது. தற்போது, சீனாவில் விற்கப்படும் ஒவ்வொரு பத்து வாகனங்களில், 4 புதிய எரியாற்றல் வாகனங்கள். மேலும், இந்த விகிதம் இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது.

நுகர்வுக்கான தேவையை விரிவாக்குவது, குறிப்பாக புதிய ரக நுகர்வு தேவையின் விரிவாக்கமானது, சீனாவைப் பொறுத்தவரை, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கான உத்வேகம் என்றும், உலகத்தைப் பொறுத்தவரை, உயிராற்றலுடன் வளர்ச்சி அடைந்து வரும் சீனாவின் புதிய ரக நுகர்வு சந்தை வணிக வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன என்றும் பொருளாகும்.