இஸ்ரேலுடன் வர்த்தகத்தை நிறுத்தவதாக துருக்கி அறிவித்தது
2024-05-03 20:11:20

காசா பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கையினால், அங்கு மனித நேய நெருக்கடி தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இதனால், இஸ்ரேலுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி நிறுத்தவுள்ளது என்று, துருக்கி வர்த்தக அமைச்சகம் மே 2ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது.

போதியளவிலான மனித நேய உதவி காசாவுக்கு வழங்க இஸ்ரேல் அனுமதிக்காவிடில், துருக்கி இந்தப் புதிய நடவடிக்கைகளைக் கண்டிப்பாக நிறைவேற்றும் என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

மேலும், துருக்கி புள்ளிவிபர பணியகத்தின் தரவுகளின் படி, 2023ஆம் ஆண்டில், துருக்கிக்கும் இஸ்ரேலுக்குமிடையேயான வர்த்தக தொகை 680 கோடி அமெரிக்க டாலராகும்.