உலகின் மிகப்பெரிய ஒற்றை கப்பல் கட்டும் ஆர்டரை சீன நிறுவனம் வென்றுள்ளது
2024-05-03 17:42:45

சீனத் தேசிய கப்பல் தயாரிப்பு குழுமம், கத்தார் எரியாற்றல் தொழில் நிறுவனத்துக்கு 271,000 கன மீட்டர் வரை கொள்ளளவு கொண்ட திரவ இயற்கை எரிவாயு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் மிகப்பெரிய 18 சரக்கு கப்பல்களைக் கட்டமைக்க உள்ளது. இது தொடர்பான ஒப்பந்த கையொப்ப விழா 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. உலக அளவில் கப்பல் கட்டுவதற்கான மிகப்பெரிய ஒற்றை முன்பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.என்.ஜி.என அழைக்கப்படும் திரவ இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் இந்தக் கப்பலின் நீளம் 344மீட்டர், அகலம் 53.6மீட்டர் மற்றும் வடிவமைக்கப்பட்ட ஆழம் 27.2மீட்டராக இருக்கும். பூஜ்ஜியத்திற்கு கீழ் 163 டிகிரி செல்சியஸ் என்ற குளிர்ச்சியான சூழலில், திரவ இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் சேவையை இக்கப்பல் வழங்க முடியும். உலகில் கட்டமைக்கப்படும் மிகவும் கடினமான கப்பல்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.