காசா பிரதேசத்தின் வட பகுதியில் பன்முக பட்டினி ஏற்பட்டது
2024-05-04 20:04:15

காசா பிரதேசத்தின் வட பகுதியில் பன்முக பட்டினி ஏற்பட்டு, இப்பிரதேசத்தின் தெற்கு பகுதிக்கு பரவி வருகிறது என ஐ.நாவின் உலக உணவு திட்ட ஆணையத்தின் செயல் இயக்குநர் சிந்தி மெகென் அம்மையார் அண்மையில் பேட்டி அளித்த போது தெரிவித்தார் என்று ஏன்.பி.சி மே 4ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

காசா பிரதேசத்தில் நாளுக்கு நாள் மோசமாகி வரும் மனித நேய சீற்றத்தை எதிர்நோக்கி, போர் நிறுத்தம், தரை மற்றும் கடல் வழிகளின் மூலம் அனுப்பப்படும் உதவிப் பொருட்களை பெருமளவில் அதிகரிப்பது ஆகியவை இன்றியமையாதவை என்றும் அவர் வலியுறுத்தினார்.