இலங்கையின் வணிகப் பொருள் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது
2024-05-04 17:06:47

இலங்கையின் வணிகப் பொருள் ஏற்றுமதி  கடந்த மார்ச் மாதத்தில் 1.14 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 9.77 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அந்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி சபை கடந்த 2ம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 7.51 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட அறிக்கையில் மார்ச் மாதத்தில் வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட மொத்த ஏற்றுமதி 1.4 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.