கைரோவில் நடைபெறும் போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஹமாஸ் பிரதிநிதிக்குழு பங்கேற்கும்
2024-05-04 18:48:13

இஸ்ரேலுடன் போரை நிறுத்துவது குறித்து எகிப்து முன்வைத்த முன்மொழிவுக்கு பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் பதில் அளித்தது. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள  4ஆம் நாள் எகிப்து தலைநகர் கைரோவுக்கு பிரதிநிதிக்குழுவை அனுப்ப இருப்பதாக எகிப்து தரப்புக்கு ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டி செயல்படுத்துவது இப்பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

இஸ்ரேலுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை உருவாக்காமல் இருந்தால், காசாப் பகுதியில் மோதல் மோசமாகும் என்று ஹமாஸ் இயக்கத்துக்கு எகிப்து எச்சரித்தது. ஹமாஸும், இஸ்ரேலும் தடை காவலில் வைக்கப்பட்டோரைப் பரிமாறி, இன்றியமையாத நடவடிக்கை மேற்கொண்டு தொடரவல்ல போர் நிறுத்தத்தை நனவாக்கி, மனித நேய உதவிப் பொருட்கள் காசாப் பகுதிக்கு அனுப்பப்படுவதற்கு வசதியை வழங்குவது எகிப்தின் முன்மொழிவின் நோக்கமாகும் என்று தெரிய வந்துள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டுவது குறித்து அமெரிக்கா எகிப்துடன் நெருங்கிய தொடர்பு மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.