சீன ஊடகக் குழுமத்துக்கு செர்பியா அரசுத் தலைவர் அளித்த பேட்டி
2024-05-04 17:00:17

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செர்பியாவில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, செர்பியா அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வுசிச் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்தார்.

இப்பயணம் பற்றி அவர் கூறுகையில், இது ஒரு முக்கிய பயணமாகும். இப்பயணத்துக்கு முழுமூச்சுடன் ஆயத்தம் மேற்கொள்வோம். இப்பயணம் வெற்றி பெறுவது, சீன மற்றும் செர்பியா மக்களின் நலன்களை உள்ளடக்கியது. மேலும், சீனாவும் செர்பியாவும் தாளார வர்த்தக உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. இரு நாடுகளின் நல்ல ஒத்துழைப்புகளை இது மேலும் முன்னேற்றும் என்றும் நம்புவதாக தெரிவித்தார்.

இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து அவர் மேலும் கூறியதாவது, சர்வதேச அரசியல் மேடைகளில் இரு நாடுகள் ஒன்றுக்கொன்று நம்பிக்கை கொள்வதோடு, பொருளாதார மற்றும் வர்த்தக உறவை உருவாக்கினோம். மேலும், பொது மக்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும். மேலதிக சீன மக்கள் செர்பியாவில் பயணம் மேற்கொள்வதை வரவேற்கிறோம். இத்தகைய தொடர்புகளின் மூலம், மேலதிக முன்மொழிவுகள் மற்றும் வர்த்தகப் பரிமாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.