ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை சீனாவும் ஹங்கேரியும் கூட்டாக கட்டியமைப்பது பற்றிய கூட்டம்
2024-05-04 20:03:06

சீனாவும் ஹங்கேரியும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை கூட்டாக கட்டியமைப்பது பற்றிய ஒத்துழைப்புக்கான ஆண்டு கூட்டம் மே 2ஆம் நாள் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது.

இரு நாடுகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், வணிக சங்கங்கள் மற்றும் தொழில் துறையின் பிரதிநிதிகள், முக்கிய ஊடகங்கள் மற்றும் சிந்தனை கிடங்குகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 200 பேர், சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய ஒத்துழைப்பு திசைக்கு வழிகாட்டி, வளர்ச்சி வாய்ப்புகளைக் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஆழமாக கருத்துக்களைப் பரிமாறி கொண்டனர். இதில் பல ஒத்துழைப்பு சாதனைகள் எட்டப்பட்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம் பற்றிய ஒத்துழைப்புக்கு புதிய உயிராற்றல் உட்புகுத்தப்பட்டுள்ளது.

ஹங்கேரி தேசிய பொருளாதாரத் துறை அமைச்சர் இக்கூட்டத்தில் பேசுகையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியை முக்கிய வாய்ப்பாக ஹங்கேரி கருதுகிறது. சீனத் தொழில் நிறுவனங்கள் ஹங்கேரியில் முதலீடு செய்து தொழில் நடத்துவது, தொடர்புடைய தொழில்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்தார். சீனாவுடன் இணைந்து அடிப்படை வசதி கட்டுமானம், புதிய உயர் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, தன் மேம்பாட்டை வெளிக்கொணர்ந்து, சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான சங்கிலியாக பங்காற்ற ஹங்கேரி விரும்புவதாக அவர் தெரிவித்தார்.