இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டம் காம்பியாவில் நடைபெற்றது
2024-05-05 19:19:14

15வது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டம் மே 4, 5 ஆகிய நாட்களில் காம்பியாவின் பஞ்சுல் நகரில் நடைபெற்றது. தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்க பேச்சுவார்த்தை மூலம் ஒற்றுமையை வலுப்படுத்துவது என்பது இக்கூட்டத்தின் கருப்பொருளாகும். உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிநிதிகள் இக்கூட்டத்திலும் தொடர்புடைய நடவடிக்கைகளிலும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையேயான புதிய சுற்று மோதல், சூடான் முதலிய நாடுகளின் அரசியல் நிலைமை, முஸ்லிம் நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் விவாதித்து, முன்மொழிவுகளை அளித்துள்ளனர்.