பிரான்ஸ்க்கான சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை அதிகரிப்பு
2024-05-05 17:24:22

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரை, பிரான்ஸ்க்கான சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை ஆண்டுக்கு சராசரியாக 5.9 விழுக்காடு அதிகரித்தது. இவ்வாண்டின் முதல் காலாண்டில், பிரான்ஸ்க்கான சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை 12 ஆயிரத்து 722 கோடி யுவானாகும்.

2023ஆம் ஆண்டு, பிரான்ஸிலிருந்து சீனா இறக்குமதி செய்த வேளாண் உற்பத்திப் பொருட்களின் மதிப்பு 4695 கோடி யுவானை எட்டியது, 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட 50.5 விழுக்காடு அதிகமாகும்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளாக, பிரான்ஸிலிருந்து சீனா இறக்குமதி செய்த நுகர்வுப் பொருட்களின் மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 12.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேவேளையில், பிரான்ஸ்க்கு சீனா ஏற்றுமதி செய்த நுகர்வுப் பொருட்களின் மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 3.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தவிரவும், சீன-பிரான்ஸ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்க ஒத்துழைப்பு மேலும் விரிவடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.