சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பை குறித்த காலத்திற்குள் முடிவு செய்யும் என எதிர்பார்ப்பு
2024-05-05 17:03:27

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவித் திட்டத்தின் மூன்றாவது கட்ட கடன் மறுசீரமைப்பு குறித்த காலத்திற்குள் முடிவேடுக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

ஜப்பானிய பிரதமர் யோகோ கமிகாவாவுடன் கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சப்ரி, இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துதல், கடன் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பு சீர்திருத்தத்தை செயல்படுத்துதல் ஆகிய பணிகளை இலங்கை  தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கூறினார்.

மின்சாரம், துறைமுகம், நெடுஞ்சாலைகள், உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு மண்டலங்கள், டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஜப்பானுக்கு  வெளிவிவகார அமைச்சர் சப்ரி அழைப்பு விடுத்தார்