சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி நிறைவு
2024-05-05 19:57:50

135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி மே 5ஆம் நாள் நிறைவடைந்தது.

மே 4ஆம் நாள் வரை, 215 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 46 ஆயிரம் கொள்வனவு வணிகர்கள் இப்பொருட்காட்சியில் நேரடியாக கலந்து கொண்டனர். வணிகர்களின் எண்ணிக்கை கடந்த பொருட்காட்சியில் இருந்ததை விட 24.5 விழுக்காடு அதிகரித்தது.

மே 4ஆம் நாள் வரை, நடப்புப் பொருட்காட்சியில் நேரடியாக ஏற்றுமதி தொகை 2470 கோடி அமெரிக்க டாலரை எட்டி, கடந்த பொருட்காட்சியில் இருந்ததை விட 10.7 விழுக்காடு அதிகரித்தது.

நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்கள் 10 லட்சத்துக்கு அதிகமான புதிய உற்பத்தி பொருட்களைக் காட்சிக்கு வைத்தன.

தவிர, 229 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்த 4 லட்சத்து 8 ஆயிரம் வணிகர்கள் இணையத்தின் மூலம் நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.