“ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி”யின் வெளியீட்டு நிகழ்வு
2024-05-06 19:27:19

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பிரான்ஸில் அரசு முறை பயணத்தின்போது, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி”யின் வெளியீட்டு நிகழ்வு மே 6ஆம் நாள் பாரிஸ் நகரில் நடைபெற்றது. பிரான்ஸின் அரசியல் அமைப்பு சட்டக் கமிட்டியின் தலைவரும், முன்னாள் தலைமையமைச்சருமான லாரன்ட் ஃபேபியஸ் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரைகள், கட்டுரைகள், உரையாடல்கள் முதலியவற்றிலுள்ள சீனப் பழமொழிகள் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடியும். பசுமை வளர்ச்சி, உயிரினச் சுற்றுச்சூழல் நாகரிகம், சட்ட ஒழுங்கு ஆக்கப்பணி, கூட்டுச் செழுமை, பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு முதலியவை, இந்நிகழ்ச்சியின் கருப்பொருட்களாகும். அவரது தலைசிறந்த அரசியல் ஞானம் மற்றும் ஆழமான வரலாற்று பண்பாட்டுத் திறனை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் இந்நிகழ்வில் கூறுகையில், சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில், இரு நாட்டு நட்புறவு, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் வழிக்காட்டலுடன் சீராக முன்னேறி வருகிறது. சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி” பிரான்ஸில் ஒளிப்பரப்பப்படுவது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிந்தனை, சீனப் பண்பாடு, சீன ஞானம் ஆகியவற்றை அனைவரும் அறிந்து கொள்வதற்கு ஜன்னலைத் திறந்து வைத்துள்ளது. பிரான்ஸ் நண்பர்களுடன் இணைந்து, மேலும் வலிமையுடைய சீன-பிரான்ஸ் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை உருவாக்கி, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவதற்கு ஞானம் மற்றும் திறனை வழங்க சீன ஊடகக் குழுமம் விரும்புகிறது என்றார்.