சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சி
2024-05-06 21:24:49

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் பயணம் மேற்கொள்ளும் போது, சீன ஊடகக் குழுமம் மே 6ஆம் நாள் பாரிஸ் நகரில் சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான பண்பாட்டு பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்தி, இரு நாடுகள் கூட்டாக தயாரித்த தலைசிறந்த திரைபடங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வெளியிட்டு, ஐரோப்பிய செய்தி நிலையத்துடன் ஒத்துழைப்பு குறிப்பாணையில் கையொப்பமிட்டது.

பிரான்ஸின் அரசியல் அமைப்பு சட்டக் கமிட்டித் தலைவரும், முன்னாள் தலைமையமைச்சருமான ஃப்பியுஸ், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங் முதலியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

ஃப்பியுஸ் கூறுகையில், இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், இரு நாட்டுறவு சீரான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்துகிறது என்றும், பிரான்ஸ்-சீன பண்பாட்டு, திரைபடம் மற்றும் தொலைக்காட்சி, சுற்றுலா, இளைஞர்களின் பரிமாற்றம் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை முன்னேற்றுவதில் சீன ஊடகக் குழுமம் முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஷென் ஹாய்சியுங் கூறுகையில், சீன-பிரான்ஸ் உறவு வளர்ந்து வரும் போக்கில், பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கான பாலமாக, நட்புறவு மற்றும் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரிப்பதற்கு ஊடகம் பங்காற்றியுள்ளது. இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவு என்ற முக்கிய வரலாற்று நேரத்தில், சீன ஊடகக் குழுமம் சிந்தனை, கலை மற்றும் தொழில் நுட்பம் ஒன்றிணைந்த தகவல்களின் பரவல் மூலம், சீன-பிரான்ஸ் மக்களின் நட்புறவை முன்னேற்றும் என்று தெரிவித்தார்.