ரஷியாவின் 8ஆவது அரசுத் தலைவராக புதின் பதவி ஏற்றார்
2024-05-07 20:05:59

ரஷியக் கூட்டாட்சியின் 8ஆவது அரசுத் தலைவராக விளாடிமிர் புதின் மே 7ஆம் நாள் உறுதிமொழி கூறி பதவி ஏற்றார்.

அவர் உறுதிமொழி கூறிய பிறகு உரை நிகழ்த்தினர். உரையில் ரஷிய மக்களின் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலை நாடுகளுடனான நெடுநோக்கு பேச்சுவார்த்தை குறித்து அவர் கூறுகையில், மேலை நாடுகளுடன் நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தலாம். ஆனால் இது சமத்துவ அடிப்படையில் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.

ரஷியாவின் தற்போதைய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 87.28 விழுக்காட்டு வாக்குக்களைப் பெற்று, 2024ஆம் ஆண்டுக்கான அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்று ரஷிய மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மார்ச் 21ஆம் நாள் அறிவித்தார்.