பெய்ஜிங்கிலிருந்து பாரிஸ் வரை சீனக் கலை கண்காட்சி துவக்கம்
2024-05-07 09:13:54

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பிரான்ஸ் பயணத்தின் போது, “பெய்ஜிங்கிலிருந்து பாரிஸ் வரை—சீன மற்றும் பிரான்ஸ் கலைஞர்களின் ஒலிம்பிக் பயணம்” என்ற கலை கண்காட்சி, மே 6ம் நாள் பாரிஸின் லெஸ் இன்வலெட்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாகத் துவங்கியது. சீன ஊடகக் குழுமம், பிரான்ஸ் தேசிய ஒலிம்பிக் மற்றும் விளையாட்டுக் கமிட்டி, பிரான்ஸ் தொழில் சார் கால்பந்து ஒன்றியம், பிரான்ஸின் பல கலை நிறுவனங்கள் ஆகியவை கூட்டாக இக்கண்காட்சியை நடத்தியுள்ளன.

சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் இதன் துவக்க விழாவில் கூறுகையில், விளையாட்டு, கலை ஆகியவை மனித குலப் பண்பாட்டில் முக்கியமான பகுதிகளாகும். சீனாவின் தற்காலக் கலைஞர்களின் 200க்கும் அதிகமான கலைப் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை, நவீனப் பண்பாட்டின் முன்னெடுப்புப் பாதையில் சீனத் தேசம் படைத்துள்ள கலை சாதனைகளை வெளிக்காட்டியுள்ளன என்று தெரிவித்தார்.