ஐ.நா யுனெஸ்கோ தலைமையகத்தில் பெங்லியுவான் பயணம்
2024-05-07 09:01:25

மே 6ஆம் நாள் காலை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவியும், பெண் குழந்தை மற்றும் மகளிர் கல்வி முன்னேற்றத்துக்கான ஐ.நா யுனெஸ்கோவின் சிறப்புத் தூதருமான பொங்லியுவான் அம்மையார் பாரிஸிலுள்ள யுனெஸ்கோவின் தலைமையகத்தைப் பார்வையிட்டார்.

யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் ஆட்ரி அசோலே அம்மையார் பெங்லியுவானுடன் சேர்ந்து சீனா மற்றும் யுனெஸ்கோவின் ஒத்துழைப்புகளுக்கான 10 ஆண்டுகால சாதனைகள் பற்றிய கண்காட்சியைக் கண்டுரசித்தார். உலகளாவிய பெண் குழந்தை மற்றும் மகளிர் கல்வியை முன்னேற்றுவிக்கும் துறையில் சீனாவின் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

அசோலேயைச் சந்தித்துரையாடிய போது, பெண் குழந்தை மற்றும் மகளிரின் கல்வியை முன்னேற்றுவதில் சீனாவின் புதிய முன்னேற்றங்களைப் பற்றி பெங்லியுவான் அறிமுகப்படுத்தினார். பெண் குழந்தை மற்றும் மகளிரின் கல்வியை முன்னேற்றுவது மாபெரும் லட்சியமாகும். அதில் பல்வேறு தரப்புகளின் ஈடுபாட்டை முன்னேற்றி மேலதிக மகளிர் சமமான கல்வி உரிமையைப் பெறுவதற்கு உதவியளித்து அருமையான எதிர்காலத்தை உருவாக்க சீனா யுனெஸ்கோவுடன் சேர்ந்து கூட்டாகப் பாடுபட விரும்புவதாகவும் பெங்லியுவான் தெரிவித்தார்.