சீன மற்றும் பிரான்ஸ் அரசுத் தலைவர்களின் மனைவிகள் ஆர்சே அருங்காட்சியகத்தில் பயணம்
2024-05-07 08:52:44

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் அம்மையார் மே 6ஆம் நாள் பிற்பகல் பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனின் மனைவி பிரிஜிட் மக்ரோன் அம்மையாரின் அழைப்பின் பேரில் ஆர்சே அருங்காட்சியகத்தில் கூட்டாக பார்வையிட்டார்.

பெங் லியுவான் அம்மையார் அப்போது கூறுகையில், சீன-பிரான்ஸ் மக்கள் ஓவியக் கலையை மிகவும் நேசிக்கிறார்கள். இரு தரப்பினரும் அதிக பரிமாற்றங்களை மேற்கொண்டு, இரு நாட்டு மக்களும் ஒருவருக்கொருவர் பண்பாட்டு அழகை மேலும் ஊட்டி, பரஸ்பர புரிந்துணர்வை ஆழப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இரு நாட்டு கலைஞர்கள் பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பரக் கற்றலை வலுப்படுத்தி, மேலும் நேர்த்தியான கலைப் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவிரவும், இருவரும், அங்கு பார்வையிட்டு வரும் பிரான்ஸ் மாணவர்களுடன் பரிமாற்றம் மேற்கொண்டனர். அனைவரும் சீன மொழியை முயற்சியுடன் கற்றுக்கொண்டு, வாய்ப்பு இருந்தால், சீனாவுக்குச் சென்று பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்று பெங் லியுவான் அம்மையார் மாணவர்களை ஊக்குவித்தார்.