ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த பழமொழி எனும் நிகழ்ச்சி செர்பியாவில் ஒளிபரப்பு!
2024-05-08 01:50:11

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பிரான்ஸில் மேற்கொண்டுள்ள அரசு முறை பயணத்தின் போது, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த பழமொழி எனும் நிகழ்ச்சி மே 7-ஆம் நாள் செர்பிய தலைநகரான பெல்க்ரேட்டில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. செர்பிய அரசுத் தலைவர் அலிக்சன்டர் வுசிசி, காணொளி மூலம்  உரை நிகழ்த்தி, செர்பியாவில் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வருகைக்கு வுசிசி, கோலாகலமான வரவேற்பு தெரிவித்தார். இதற்கிடையில், செர்பிய-சீன நட்புறவுக்கு பெரும் முயற்சியை மேற்கொண்ட சீன ஊடகக் குழுமத்துக்கு நன்றி தெரிவித்த அவர், வரும்காலங்களில் பல வழிகளில் சீன ஊடகக் குழுமத்துடன் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றலை வலுப்படுத்த விருப்புவதாகத் தெரிவித்தார்.

சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநர் ஷென் ஹாய்சியொங் கூறுகையில், சீன-செர்பிய பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் மக்களிடையிலான நட்பை முன்னெடுக்கப் பாடுபட்டு வருகிறோம். பண்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் நட்புணர்வை வெளிப்படுத்தி, சீன-செர்பிய நட்பு, பரவலாக புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க வேண்டும். ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த பழமொழி எனும் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு, செர்பிய மக்கள் சீனாவின் சிறப்பு ஈர்ப்பாற்றலைப் புரிந்து கொள்வதற்கு ஒரு ஜன்னலைத் திறக்கும் என்று அவர் கூறினார்.