சீன-ரஷிய உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-05-08 17:56:51

விளாடிமிர் புதின் மே 7ஆம் நாள் ரஷிய அரசுத் தலைவராகத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாகப் பதவி ஏற்றார். புதிய பதவி காலத்தில் அவரது முதலாவது பயணத்தின் இடம் சீனாவாகும் என்று ரஷிய அரசுத் தலைவரின் துணையாளர் தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் 8ஆம் நாள் கூறுகையில், ரஷியாவின் புதிய அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற புதின்னுக்குச் சீனா வாழ்த்து தெரிவிக்கிறது. அரசுத் தலைவர் புதின்னின் தலைமையில், ரஷிய நாட்டின் கட்டுமானம் மற்றும் பொருளாதாரச் சமூக வளர்ச்சி புதிய சாதனைகளைப் பெறும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

மேலும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் புதின்னின் நெடுநோக்கு வழிக்காட்டலுடன், சீன-ரஷிய உறவு சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகள் இரு நாட்டு மக்களுக்கு பயனுள்ள நலன்களை வழங்கி, உலகக் கூட்டு வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பங்காற்றியுள்ளன. இவ்வாண்டு சீன-ரஷியத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இரு தரப்புகள், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்தக் கருத்துகளைப் பின்பற்றி, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்தி, உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, உலக மேலாண்மை மேலும் நேர்மையான திசையை நோக்கி முன்னேறுவதற்கு வழிக்காட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.