மேலும் அருமையான எதிர்காலத்தை படைக்கும் சீன-பிரான்ஸ் ஒத்துழைப்பு
2024-05-08 10:39:03

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பாரிஸில் பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரோனுடன் 6ஆம் நாள் நடத்திய பேச்சுவார்த்தையில் பல சாதனைகள் எட்டப்பட்டன. அப்போது மாக்ரோன் கூறுகையில், தற்போதைய உலகம் கடும் அறைகூவல்களை எதிர்நோக்கி வருகிறது. முன்பை விட, பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தேவைப்படுகிறது என்றார்.

சுதந்திரம், ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு, பொறுப்பு ஆகியவற்றால் சீன-பிரான்ஸ் உறவின் சிறப்பை ஷிச்சின்பிங் தொகுத்துக் கூறினார். அதில் அவர் கூறுகையில், சீன-பிரான்ஸ் உறவின் வளர்ச்சியை நிலைப்படுத்துவதோடு, அதன் மேலும் அருமையான எதிர்காலத்தை உருவாக்க விரும்புவதாக பிரான்ஸ் பயணத்தின் போது, ஷிச்சின்பிங் அந்நாட்டின் செய்தி ஊடகங்களில் வெளியிட்ட பெயரிட்ட கட்டுரையில் குறிப்பிட்டார். இரு நாட்டுறவு புதிய எதிர்காலத்தைப் படைப்பதற்கான முக்கிய தருணத்தில் இருப்பதாகவும் அரசுத் தலைவர் மாக்ரோனும் கருத்து தெரிவித்தார்.

அரசியல் ரீதியில், சீன மற்றும் பிரான்ஸுக்கும் இடையே புவிசார் அரசியல் முரண்பாடு இல்லை. அடிப்படை நலன் மோதலும் இல்லை. பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு சீன நாட்டுறவின் உந்து ஆற்றலாகும். அடுத்த 60 ஆண்டுகளில் சீன-பிரான்ஸ் உறவில் மாபெரும் வாய்ப்புகள் உண்டு. இரு நாட்டு மக்களுக்கும் மட்டுமல்ல, சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பையும் உலக அமைதி மற்றும் வளர்ச்சியையும் அது முன்னேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.