சீன-செர்பிய மானிடப் பரிமாற்ற நடவடிக்கை துவக்கம்
2024-05-08 08:52:33

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் செர்பிய பயணத்தை முன்னிட்டு, மே 7ஆம் நாள் சீன ஊடகக் குழுமமும் செர்பிய தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையமும் அதன் தலைநகரான பெல்கிரேட்டில் சீன-செர்பிய மானிடப் பரிமாற்ற நடவடிக்கையைக் கூட்டாக நடத்தின. செர்பிய துணைத் தலைமையமைச்சர் அலெக்சாண்டர் வுலின், சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹை சியோங் இதில் உரை நிகழ்த்தினர்.

வுலின் கூறுகையில், சீன ஊடகக் குழுமம் உள்ளிட்ட சீன செய்தி ஊடகங்களுடன் இணைந்து பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த விரும்புகின்றோம். மேலும், இரு நாடுகளுக்கிடையே ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுதல் மற்றும் இரு நாட்டு மக்களின் நட்பு தகவல்களைப் பரிமாறுதலை செவ்வனே செய்ய வேண்டும். இருநாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவின் வளர்ச்சிப்போக்கை நிலைநிறத்த செர்பியா விரும்புகின்றது என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக, சீன ஊடகக் குழுமம் மற்றும் செர்பியாவின் பல முக்கிய செய்தி ஊடகங்களுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றது. அடுத்து, இருநாட்டு மானிட பரிமாற்றத்தை மேலும் விரிவாக்கி, மனித குலத்துக்கான பொது எதிர்காலத்தை உருவாக்குவதை முன்னேற்றுவதற்குப் புதிய உயிராற்றல் ஊட்ட வேண்டும் என்று ஷென் ஹை சியோங் விருப்பம் தெரிவித்தார்.