மத்திய கிழக்கு பிரதேச நிலைமை குறித்து சீனா-பிரான்ஸ் கூட்டறிக்கை மனித குலத்தின் நியாயம் மற்றும் நீதி
2024-05-08 11:20:46

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 5ஆம் நாள் முதல் 7ஆம் நாள் வரை பிரான்ஸில் பயணம் மேற்கொண்டார். அப்போது, மத்திய கிழக்கு பிரதேச நிலைமை குறித்து இரு நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டன. பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை, செங்கடல் நெருக்கடி முதலிய மத்திய கிழக்கு தொடர்பான அவசர விவகாரங்கள் குறித்து, இரு தரப்பும் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டி, குரல் எழுப்புவது முதன்முறையாகும்.

ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடாகவும் தற்சார்பு பெரிய நாடாகவும் திகழும் சீனாவும் பிரான்ஸும், மத்திய கிழக்கு பிரச்சினை குறித்து பரந்தளவில் ஒருமித்த கருத்துக்களைக் கொண்டுள்ளன. இப்பயணத்தின் போது, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பல முறை சுட்டிக்காட்டினார்.

அவர் கூறையில்,

விரைவில் பன்முகங்களிலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பது தற்போதைய அவசர கடமையாகும். மனித நேய மீட்பு பணிக்கு உத்தரவாதம் செய்வது மிகவும் முக்கியம். இதற்கு, இரு நாட்டு தீர்வை நடைமுறைப்படுத்துவது அடிப்படை தீர்வாகும். பிரான்ஸ் சீனத் தரப்புடன் இணைந்து தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை நெருக்கமாக்கி, பல தரப்புவாதத்தையும் ஐ.நாவின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தையும் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்றார் அவர்.

மத்திய கிழக்கு நிலைமை குறித்து இரு தரப்பும் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள் மற்றும் இதில் இருந்து வெளிக்காட்டப்பட்ட அறிவுத்திறன் மற்றும் தைரியம் ஆகியவை உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.