செர்பிய தேசிய அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பெங் லியுவான்
2024-05-09 01:04:32

சீன அரசுத் தலைவரின் மனைவி பெங் லியுவான் அம்மையார் மே 8ஆம் நாள் முற்பகல், செர்பிய அரசுத் தலைவரின் மனைவி தமரா வுசிச்,அம்மையாருடன் இணைந்து செர்பிய தேசிய அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பின்,பெங் லியுவான் கூறுகையில், நீண்டகால வரலாறுடைய செர்பிய தேசிய அருங்காட்சியகம் வளமான சேகரிப்புகளைக் கொண்டுள்ளது. தொல்பொருட்களைப் பாதுகாத்து அவற்றை காட்சிக்கு வைக்கும் ஜன்னலாக மட்டுமல்லாது, நாகரிகத்தை வெளிப்படுத்தும் மாளிகையாகவும் செர்பியத் தேசிய அருங்காட்சியகம் திகழ்வதாகப் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் சீனாவுக்கும் செர்பியாவுக்கும் இடையே பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நாகரிக உரையாடலுக்கான பாலத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.