சீன-ஹங்கேரி மனிதப் பண்பாட்டு பரிமாற்றம் நடைபெறுதல்
2024-05-09 09:58:03

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 8ஆம் நாளிரவு புடாபெஸ்ட்ல் சென்றடைந்து அந்நாட்டில் அரசு முறைப் பயணத்தை துவங்கினார். இதனிடையே, சீன ஊடகக் குழுமம் மற்றும் ஹங்கேரி ஊடக ஆதரவு மற்றும் சொத்துரிமை நிர்வாக நிதியம் புடாபெஸ்டிலில், சீன-ஹங்கேரி நட்புறவு புதிய அத்தியாயம் எனும் இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவு மனித பரிமாற்ற நடவடிக்கைகளை நடத்தின.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் இதில் உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில்,

கடந்த சில ஆண்டுகளில், இரு தரப்புகளுக்கிடையில் மனித பரிமாற்ற நடவடிக்கைகள் செழுமையாக மேற்கொள்ளப்பட்டன. இரு நாடுகளின் மக்கள், குறிப்பாக, இளைஞர்களுக்கிடையில் புரிந்துணர்வு மற்றும் நட்புறவு மேலும் ஆழமாகியுள்ளது. இரு நாடுகளின் மக்கள் ஒருவருடன் ஒருவர் புரிந்துகொண்டு அன்புடன் பழகுவதை சீன ஊடகக் குழுமம் முயற்சியுடன் விரைவுபடுத்தும். இரு நாடுகளுக்கிடையில் மனிதப் பரிமாற்றத்திற்கு மேலும் பரந்த மேடையை வழங்கி, இரு தரப்புகளின் நட்புறவு, ஒன்றுடன் ஒன்று பரிமாற்றத்தின் மூலம் நெருக்கமாகி வருகிறது என்றார் அவர்.