ஷிச்சின்பிங் மற்றும் ஆர்பனின் நட்பார்ந்த தொடர்பு
2024-05-09 11:12:16

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சிறப்பு விமானத்தின் மூலம் ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டைச் சென்றடைந்து, மே 8ஆம் நாளிரவு ஹங்கேரியில் அரசுமுறைப் பயணம்  மேற்கொள்ளத் துவங்கினார். அந்நாட்டுத் தலைமையமைச்சர் ஆர்பன் விக்டர் மற்றும் அவரது மனைவி விமான நிலையத்தில் வரவேற்றனர்.

ஷிச்சின்பிங் மற்றும் ஆர்பன் பலமுறை சந்தித்துப் பேசினர். ஷிச்சின்பிங் கூறுகையில், சீன- ஹங்கேரி பாரம்பரிய நட்புறவு, வாழையடி வாழையாக நிலவி வருகின்றது.

சீனாவும் ஹங்கேரியும் ஒன்றுக்கு ஒன்று நம்பகத்தன்மை வாய்ந்த நல்ல நண்பர்கள் மற்றும் நல்ல கூட்டாளி நாடுகளாகும். இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவைப் புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்வதை முன்னேற்றி, இரு நாட்டு நட்பார்ந்த ஒத்துழைப்பு உறவின் புதிய அத்தியாயத்தைத் தொடர்ந்து எழுதும் என்றார்.