புதிய யுகத்தில் சீன-செர்பியா உறவின் புதிய உயிராற்றல்
2024-05-09 15:48:08

8ஆண்டுகளுக்குப் பின்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செர்பியாவில் பயணம் மேற்கொண்ட போது, இரு நாட்டுறவைப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவாக உயர்த்தியதாக இரு நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்தனர். ஷிச்சின்பிங்கின் இம்முறைப் பயணத்தின் போது, சீன-செர்பியா பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை ஆழமாக்கி உயர்த்துவதாகவும் புதிய யுகத்தில் சீன-செர்பியா பொது சமூகத்தைக் கட்டியமைப்பதாகவும் இரு நாட்டுத் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இரு தரப்பும் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுப் பல்வேறு துறைகளில் பன்முகமான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. சீனாவுடன் இணைந்து பொது சமூகத்தைக் கட்டியமைப்பதில் சேர்ந்த முதலாவது ஐரோப்பா நாடாக செர்பியா மாறியுள்ளது. இரு நாட்டுறவின் நெடுநோக்கு மற்றும் சிறப்புத் தன்மையையும் உயர்தர நிலையையும் இது வெளிக்காட்டியுள்ளது.

சீனா மற்றும் செர்பியாவின் எதிர்கால அணுகுவதில், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து நம்பிக்கை கொள்வது அதன் அடிப்படையாகும். செர்பியாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசங்களின் ஒருமைப்பாட்டுக்குச் சீனா எப்போதும் முழுமையாக மதிப்பளித்து வருகிறது. செர்பியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் சீனா ஆதரவளித்து வருகிறது. அதே வேளையில், தைவான் உள்ளிட்ட சீனாவின் மைய நலனுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் செர்பியா சீனாவுக்கும் உறுதியாக ஆதரவளித்து வருகிறது. ஒன்றுக்கொன்று ஆதரவளிப்பதில் இரு நாடுகள் தொடர்ந்து ஊன்றி நின்று நெடுநோக்கு ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழமாக்க வேண்டும். தத்தமது அரசியல் பாதுகாப்பு மற்றும் அடிப்படை நலன்களை நன்கு பேணிக்காக்க வேண்டும். சீனா மற்றும் செர்பியாவுக்கிடையில் ஒன்றுக்கொன்று நம்பிக்கை தொடர்ந்து ஆழமாக்குவதை இது முன்னேற்றும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

செர்பிய அரசுத் தலைவர் வூசிச் கூறுகையில், செர்பியாவின் எதிர்காலம் சீனாவுடன் நெருக்கமாக இணைந்துள்ளது என்றார். புதிய யுகத்தில் இரு நாடுகளின் நட்புறவு புதிய உயிராற்றலை வெளிக்கொணரும் என்று அதன் மூலம் எதிர்பார்க்கப்பட முடியும்.