ஷிச்சின்பிங்கிற்குச் செர்பிய பொது மக்கள் அளித்த அன்பான வரவேற்பு
2024-05-09 00:33:48

மே 8ஆம் நாள் முற்பகல், செர்பிய அரசுத் தலைவர் வூசிச்சியுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அந்நாட்டு அரசு கட்டிடத்தின் வெளிமேடைக்குச் சென்று செர்பிய மக்களைச் சந்தித்தார். அப்போது, கட்டிடத்துக்கு முன்னால் உள்ள சதுக்கத்தில் திரண்டு நின்ற சுமார் 15ஆயிரம் செர்பிய பொது மக்கள் தங்களின் கைகளில் ஏந்தி நின்ற இரு நாட்டு தேசியக் கொடிகளையும் அசைத்து ஷிச்சின்பிங்கின் வருகைக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்தனர்.